பத்திரப்பதிவு கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் – ராமதாஸ்

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பத்திரப்பதிவுக்கான கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.வீடுகள் மற்றும் மனைகளுக்கான வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ள போதும், பதிவுக்கட்டணம் 4 சதவீதமாக உயர்த்தப்பட்டிருப்பதால் நேர்மையாக சொத்து மதிப்புகளை காட்ட விரும்புவர்கள் பாதிக்கப்படக் கூடும் என்று அவர் கூறியுள்ளார். நிலங்களின் தேவை, அமைவிடம், சந்தை மதிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தான் ஒவ்வொரு பகுதிக்குமான நில வழிகாட்டி மதிப்பை அரசு நிர்ணயித்திருக்க வேண்டும் என்று கூறியுள்ள ராமதாஸ், தற்போது நிலங்களின் மதிப்பு குறைக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.26-1490508817-ramadoss945-600சொத்துக்களைப் பதிவு செய்வதற்கு நாடு முழுவதும் 4 சதவீதம் முத்திரைக் கட்டணம், ஒரு சதவீதம் பதிவுக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவுறுத்தலை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *