பத்மநாபசாமி கோவிலில் வைரங்கள் மாயம்!

Comments (0) இந்தியா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் இருந்து வைரங்கள் மாயமாகி உள்ளது என செய்திகள் வெளியாகி உள்ளது.கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில், புகழ்பெற்ற பத்மநாபசாமி கோவில் உள்ளது. பழமையான அக்கோவிலில், ரகசிய பாதாள அறைகள் இருப்பதாகவும், அங்கு பொக்கிஷங்கள் வைக்கப்பட்டு இருப்பதாகவும் பேச்சு எழுந்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில், கோவிலில் 5 பாதாள அறைகள் திறக்கப்பட்டன. அங்கு தங்கம், வெள்ளி ஆபரணங்கள் என ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு போடப்பட்டது.மேலும், கோவிலை ஆய்வு செய்ய கோர்ட்டின் ஆலோசகராக மூத்த வக்கீல் கோபால் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டார். அவர் கோவில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அதுபற்றி முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார், அதன் அடிப்படையில், முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராயிடம் கோவில் சொத்துகளை தணிக்கை செய்யும் பொறுப்பை சுப்ரீம் கோர்ட்டு ஒப்படைத்தது.இவ்விவகாரத்தில் ஸ்ரீ பத்மநாபசாமி கோவில் சாமி சிலையில் இருந்து 8 வைரங்கள் மாயமாகி உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு சிறப்பு வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியன் அறிக்கையை தாக்கல் செய்து உள்ளார். வைரங்களின் மதிப்பானது ரூ. 21 லட்சமாக இருக்கும் என கூறப்பட்டு உள்ளது. அதற்கு மேலாகவும் இருக்கலாம் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2015 ஆகஸ்ட் மற்றும் மார்ச் 2016-ம் ஆண்டுகளில் கணக்கின் போது குறிப்பிடப்பட்ட வைரங்கள், 2017 மே மாதம் மாயமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது என சுப்பிரமணியன் அறிக்கையில் தெரிவித்து உள்ளதாக ஆங்கில பத்திரிக்கை செய்தி வெளியிட்டு உள்ளது.கோவில் பாதுகாப்பு செயலாளர் ஆய்வு செய்தபோது வைரங்கள் மாயமாகியது தெரியவந்து உள்ளது, நாளை இவ்வழக்கு தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடக்கிறது.
கோவிலில் பாதுகாப்பு நிலவரங்கள் மறு ஆய்வு செய்யப்பட்டு டிஐஜி எச்.வெங்கடேஷ் தலைமை பாதுகாப்பு அதிகாரியாகவும், கண்காணிப்பு அதிகாரியாகவும் நியமனம் செய்யவேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆடிட்டர் நியமனத்திற்கும் பரிந்துரை செய்யப்பட்டு உளளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
2004–ம் ஆண்டு முதல் 2014–ம் ஆண்டு வரையிலான கணக்குகளை வினோத் ராய் கமிட்டி தணிக்கை செய்தது அறிக்கை சமர்பித்த போது ரூ.186 கோடி மதிப்புள்ள தங்கம் மாயமாகி விட்டதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *