பாகிஸ்தானில் எண்ணெய் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து வெடித்துச் சிதறியது – 148 பேர் பலி

Comments (0) உலகம், செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பாகிஸ்தானில் எண்ணெய் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில், 148 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். பஹவல்பூர் பகுதியில் எண்ணெய் ஏற்றிச் சென்ற லாரி சாலையில் நிலைதடுமாறி திடீரென கவிழ்ந்தது.அதைக் கண்டவர்கள், விபத்துக்குள்ளான ஓட்டுநரை மீட்க முயற்சி மேற்கொள்ளாமல், டேங்கர் லாரியிலிருந்து கசிந்த எண்ணெயைப் பிடிக்க முந்தியடித்துக் கொண்டு போட்டி போட்டனர். அப்போது, அருகில் ஒருவர் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.அதில் இருந்து பறந்து வந்த தீப் பொறி எண்ணெயில் பற்றியதால், டேங்கர் லாரி முழுவதும் பரவி வெடித்துச் சிதறியுள்ளது. இதில் எண்ணெய்யை பிடித்துக் கொண்டிருந்தவர்கள் தீ பிடித்து உடல் கருகி உயிரிழந்தனர்.இச்சம்பவத்தில் அவ்வழியே சென்று கொண்டிருந்த கார், மோட்டார் சைக்கிள்களும் தீக்கிரையாகின. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள், 148 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.சம்பவ இடத்தில் கருகிய நிலையில், அவர்களின் சடலங்கள் கிடந்ததைக் கண்டு சாலையில் சென்றவர்கள் கதறி அழுதனர். காயங்களுடன் மீட்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர், அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. நாளை ரம்ஜான் கொண்டாடப்படவுள்ள நிலையில், பாகிஸ்தானில் 148 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *