பாஜக அரசின் ஊழல்: அம்பலப்படுத்திய ஆர்.எஸ்.எஸ்.!

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பிரதமர் மோடி தலைமையிலான மோடி அரசில் இதுவரை ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட கிடையாது என்று அதன் மூன்றாவது ஆண்டு துவக்க விழாவின்போது

 • 1501678580b
 • Exhibition at National Archives of India
 • 1501678580a
பிரமுகர்கள் பெருமிதப்பட்டுக் கொண்டனர்.ஆனால், தற்போது பிரதமர் மோடி தலைமையில் செயல்படும் நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா திடீரென தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். நிதி ஆயோக் அமைப்பின் ஊழல் முகத்தை வேறு எந்த எதிர்க்கட்சியும் அல்ல… ஆர்.எஸ்.எஸ். அமைப்பே அம்பலப்படுத்தியதால்தான் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜினாமா செய்துள்ளார் என்று டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.நிதி ஆயோக் என்பது பிரதமர் மோடியின் கனவு அமைப்பு. திட்டக் கமிஷனை கலைத்துவிட்டு இந்த அமைப்பை ஏற்படுத்தினார் மோடி.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் துணை அமைப்புகளில் ஒன்றான சுதேசி ஜக்ரான் மஞ்ச் சின் இணை அமைப்பாளர் அஸ்வனி மகாஜன் கடந்த மே 1 ஆம் தேதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் நிதி ஆயோக் நிறுவனம் பற்றி கடுமையான குற்றச்சாட்டுகளை அவர் அடுக்கியுள்ளார். நிதி ஆயோக் நிறுவனம் முழுமையான கார்ப்பரேட் அஜெண்டாவோடு செயல்படுகிறது. இது இந்தியாவுக்கு எதிரான செயல்,. இந்தியர்களுக்கு எதிரான செயல். மக்களுக்கு என்ன வாக்குறுதி அளித்தீர்களோ அதற்கு நேர் எதிராக செயல்படுகின்றன,உங்கள் துறைகள்.குறிப்பாக நிதி ஆயோக் அமைப்பும், சுகாதாரத் துறை அமைச்சகமும் மருந்து உற்பத்தி நிறுவனங்களோடு மறைமுக உறவு வைத்துக் கொண்டு… மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்துவதில் இருந்து தவறிவிட்டன. நாட்டில் மருந்து விலையையும், மருத்துவ உபகரணங்களின் விலையையும் ஆய்வு செய்து நிர்ணயிக்க தேசிய மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணையம் என்ற அமைப்பு இருக்கிறது. நிதி ஆயோக் அமைப்போ இந்த கட்டுப்பாட்டு ஆணையத்தை கலைத்துவிடுமாறு சிபாரிசு செய்திருக்கிறது.எதற்காக இந்த சிபாரிசு? மருந்துவிலை கட்டுப்பாட்டு ஆணையத்தைக் கலைத்துவிட்டால் மருந்து கம்பெனிகள் தங்கள் இஷ்டத்துக்கு விலை நிர்ணயம் செய்துகொள்ளலாம்.இப்படிப்பட்ட கார்ப்பரேட் அஜெண்டாவோடுதான் நிதி ஆயோக் செயல்படுகிறது. எனவே அரவிந்த் பனகரியாவுக்கு பதில் சமூக அவலங்களை அறிந்த ஒருவரை நிதி ஆயோக் துணைத் தலைவராக நியமிக்க வேண்டும்’’ என்று பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார் அஸ்வினி மகாஜன்.இந்தக் கடிதத்தைத் தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ்.சிடம் இருந்து வந்த தொடர் அழுத்ததை அடுத்துதான் அரவிந்த் பனகாரியா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.நிதி ஆயோக் மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஆகியவை மருந்து உற்பத்தி நிறுவனங்களோடு மறைமுகமான புரிந்துணர்வு வைத்திருந்ததாக அஸ்வினி மகாஜன் குற்றம் சாட்டியிருக்கிறார். இதுவே ஊழல் நடந்திருக்கிறது என்பதற்கான முகாந்திரத்தை உறுதி செய்கிறது.மோடி அரசு மீது எதிர்க்கட்சிகள் ஏதும் ஊழல் புகாரை சொல்வதற்கு முன் ஆர்.எஸ்.எஸ்.சே மிகக் கடுமையான புகாரைக் கூறி அதன் விளைவாக நிதி ஆயோக் என்ற முக்கியமான அமைப்பின் துணைத் தலைவரே ராஜினாமா செய்துவிட்டார்.
ஆனாலும் இதுபற்றி எந்த ஊடகங்களும் ஊழல் பிரச்னையை பெரிதாக பேசவில்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *