பாஜக அரசு தங்களை காழ்ப்புணர்ச்சியுடன் நடத்துவதாக காங்கிரஸ் புகார்

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

புதிய பாஜக அரசு தங்களை காழ்ப்புணர்ச்சியுடன் நடத்துவதாக உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.முதலில் பாரம்பரியமிக்க நேரு பவனை தனிநபர் ஒருவர் உரிமை கோரிய விவகாரத்திலும், இப்போது அமேதி தொகுதியில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை செயல்படும் இடத்தை திரும்ப அளிக்க கேட்டும் கட்சியை கொடுமைக்கு உட்படுத்தும் செயல் என்று அக்கட்சியினர் தெர்வித்துள்ளனர்.அமேதி தொகுதியில் 1.03 ஹெக்டேர் நிலத்தில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை சார்பில் தொண்டு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்நிலம் மாநில அரசால் தொழிற்பயிற்சி மையம் அமைக்க ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் சட்ட விரோதமாக காங்கிரஸ் கட்சி இந்நிலத்தை ஆக்கிரமித்துள்ளது என்றும் இதை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால் அந்த உரியவர் என்பதை அவர் கூறவில்லை. எனினும் ராஜீவ் காந்தி அறக்கட்டளை கடந்த 13 ஆண்டுகளாக அங்கு செயல்பட்டு வருகிறது என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.இந்த விவகாரம் ஸ்மிருதி இரானி அமேதியில் 2014 ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டப் போதிலிருந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. முந்தைய அகிலேஷ் அரசு இவ்விஷயத்தில் கவனம் கொள்ளவில்லை. ஆனால் யோகி ஆதித்யநாத் அரசு இப்போது கையில் எடுத்துள்ளது.அமேதி தொகுதி ராகுல் காந்தியின் தொகுதி என்பதும் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சோனியா காந்தியே தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *