பாஜக தலைமை அலுவலகத்துக்கு தபால் மூலம் வந்த வெடிமருந்து தடவிய கடிதம்

Comments (0) இந்தியா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தமிழகத்துக்கு வந்துள்ள நிலையில், சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலக முகவரிக்கு தபால் மூலம் வந்த வெடிமருந்து தடவிய கடிதம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சென்னை தியாகராயர்நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு, வெள்ளியன்று பிற்பகலில் எழும்பூரிலிருந்து வதூத் என்ற அனுப்புனர் முகவரியுடன், தபால் ஒன்று வந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கு வந்த போலீசார், தபாலைப் பிரித்துப் பார்த்தனர். தபாலின் ஒரு பக்கத்தில் திரி வைக்கப்பட்டும், வெடிமருந்து தடவப்பட்டும் இருந்தது. அதைக் கைப்பற்றிய போலீசார், என்ன வகையான வெடிமருந்து? என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.16dmk7ஏற்கெனவே வெடிமருந்து தடவிய மிரட்டல் கடிதங்கள் 2 பாஜக அலுவலகத்துக்கும், சாலிகிராமத்தில் உள்ள அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுடைய வீட்டுக்கும் வந்தன. இந்நிலையில், மீண்டும் ஒருமுறை தமிழிசையின் பெயரைக் குறிப்பிட்டு வெடிமருந்து தடவிய கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தமிழகம் வந்துள்ள நிலையில், இந்த வெடிமருந்து கடிதம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *