பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து அத்வானிக்கு விலக்கு – நீதிமன்றம்

Comments (0) இந்தியா

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

advani-bjpபாபர் மசூதி இடிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் பா.ஜ.க. மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த விசாரணை நாள்தோறும் நடத்தப்பட்டு, ஓராண்டிற்குள் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அத்வானி உள்ளிட்டோரிடம் சிபிஐ விசாரணையை தொடங்கியது.இந்நிலையில் கட்சி பணி, அரசு பணி, வயது மூப்பு உள்ளிட்ட காரணங்களால் விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பிஜேபி தலைவர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை இன்று விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோருக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *