பால் கலப்பட விவகாரம்: யாராக இருந்தாலும் நடவடிக்கை;-ஐகோர்ட்டு எச்சரிக்கை

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பால் கலப்பட விவகாரத்தில் தடையை மீறி செயல்பட்டது தெரிய வந்தால் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐகோர்ட்டு எச்சரித்துள்ளது.தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் தனியார் நிறுவனங்களில் பால் தரம் குறைந்து என்றும் ரசாயன பொருட்கள் கலக்கப்பட்டுள்ளது என்று பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார்.இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ஆரோக்கியா, டோட்லா, விஜய் ஆகிய தனியார் பால் விற்பனை நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன.
அதில், தங்கள் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பால் மற்றும் பால் பொருட்கள் குறித்து பேசுவதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தடை விதிக்கவேண்டும் என்றும் அவதூறான கருத்துக்களை தெரிவித்த அமைச்சர் தங்கள் நிறுவனத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி சி.வி.கார்த்திகேயன், தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பால் குறித்து ஆதாரம் இல்லாமல் கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பால் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன், ‘பால் நிறுவனங்கள் குறித்து பேசுவதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு இந்த ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. ஆனால் அந்த தடையை மீறி அமைச்சர் தற்போது செயல்படுகிறார்.அவர் தன்னுடைய வக்கீலை, ஊடகங்களுக்கு பேட்டியளிக்க வைத்துள்ளார். தனியார் நிறுவனத்தின் பால் தரம் குறைந்தவை என்று மீண்டும் மீண்டும் அந்த வக்கீல், ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகிறார். இந்த செயல், இந்த ஐகோர்ட்டின் உத்தரவை மீறுவதாகவும் உள்ளது’ என்று வாதிட்டார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வக்கீல் ராகவாச்சாரி வாதம் செய்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி கார்த்திகேயன், ‘ஊடகங்களுக்கு வக்கீல் அளித்த பேட்டி தொடர்பான ஆதார ஆவணங்களை தாக்கல் மனுதாரர் வக்கீல் தாக்கல் செய்யவேண்டும்.ஒருவேளை இந்த ஐகோர்ட்டு தடை உத்தரவை மீறி செயல்பட்டதாக தெரிந்தால், யாராக இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கு விசாரணையை நாளை (புதன்கிழமை) 2.15 மணிக்கு தள்ளிவைக்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *