பிக்பாஸ் நிகழ்ச்சியால் கலாசாரம்,சீரழிந்துவிடுமா?;-கமல்ஹாசன் விளக்கம்

Comments (0) சினிமா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் என்கிற நிகழ்ச்சி கடந்த 2 வாரங்களாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அந்த நிகழ்ச்சியில் நடிகை காயத்ரி ரகுராம் மற்ற நடிகைகளை பார்த்து சேரிப் பழக்கவழக்கம் என்று தலித் மக்களை இழிவுபடுத்தி பேசுகிறார் எனவும் ஆபாசமாக பேசியும், நடித்தும் வருகிறார்கள் எனவும் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.’பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று காவல்துறை ஆணையரிடம் இந்து மக்கள் கட்சி புகார் அளித்துள்ளது.தமிழர்கள் உயிரைவிட மேலாக மதித்து போற்றும் தமிழ்த்தாய் வாழ்த்தைக் கூட கிண்டலடிக்கும் காட்சிகளும் இந்நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனையும், அந்நிகழ்ச்சியில் நடிக்கும் நமீதா, ஓவியா, காயத்ரி ரகுராம், ஜூலி, ஆர்த்தி, ரைசா, கஞ்சா கருப்பு, வையாபுரி, சக்தி, அருள், தரணி, சினேகன், கணேஷ் உள்ளிட்ட 14 பேரையும் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்து தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டை காப்பாற்றிடுமாறு கேட்டுக் கொள்கிறோம் என இந்து மக்கள் கட்சி புகார் கொடுத்து உள்ளது.இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து பேசிவருகிறார்.என்னை கைது செய்ய வேண்டும் என சொல்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை. கைது செய்வோம் என்றால் அது நடக்கட்டும், என்னை சட்டம் பாதுகாக்கும் என நம்பிக்கை உள்ளது என்றார். மேலும் பேசுகையில், இந்தி தெரியாமல் இருப்பதால் என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி புரியாமல் இருந்திருக்கலாம். என்னை நம்பும் மக்களுக்கு நல்ல விருந்து அளிக்க கடமைப்பட்டுள்ளேன். கைது செய்ய வலியுறுத்தும் கூட்டத்திற்கு பதில் சொல்லும் கடமை எனக்கு கிடையாது. என்னை சிறையில் அடைத்து பார்க்க வேண்டும் என்பவர்களும் என்னுடைய ரசிகர்கள்தான். தசாவரதத்தின் போது என்னை கொண்டாடியவர்கள் இப்போது எதிர்க்கிறார்கள்.சைவம் என்பதற்கு வேறு பொருள் இருந்தாலும் இங்கு மதத்தோடு சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. தமிழில் மட்டுமே சைவத்திற்கு மதத்தினோடு தொடர்புடைய விளக்கம் சொல்லப்படுகிறது. பிற மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் எந்த அளவிற்கு தேவையானதோ, அந்த அளவிற்கு பிக்பாசும் தேவையானது. காயத்ரி ரகுராம் பேசியது என்னுடைய திரைக்கதை என்றால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். முத்தக் காட்சியால் சீரழியாத கலாசாரம், பிக்பாஸ் நிகழ்ச்சியால் என கூறிஉள்ளார்பாவனா பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சட்டமும், நீதியும் சரியாக செயல்பட்டிருக்கிறது என கமல்ஹாசன் கூறிஉள்ளார்.ஜிஎஸ்டி குறித்து பேசுகையில் வரிக்குறைப்பு திருப்திகரமாக இல்லை, 28 சதவீதத்திலிருந்து 18% ஆக குறைத்ததற்கு நன்றி என குறிப்பிட்டு உள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவு படுத்தவில்லை, தமிழ் தெரியாதவர்களுக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டது என கூறி தொடர்ந்து
விளக்கம் அளித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *