பிக் பாஷ் லீக்கில் இடம் பிடித்து ரஷித் கான் சாதனை

Comments (0) உலகம், செய்திகள், விளையாட்டு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் ஐ.பி.எல். தொடரைத் தொடர்ந்து பிக் பாஷ் லீக் தொடரிலும் இடம்பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.ஆப்கானிஸ்தானில் உச்சக்கட்ட உள்நாட்டு போர் நடைபெற்ற போதிலும், வீரர்கள் தயங்காமல் கிரிக்கெட் பயிற்சியை மேற்கொண்டனர். உள்நாட்டில் போதிய வசதி இல்லாத காரணத்தில், இந்தியா போன்ற நாடுகளை சொந்த மைதானமாக கொண்டு பயிற்சி எடுத்தது.தங்களது தீவிர முயற்சியின் காரணமாக கிரிக்கெட் போட்டியில் நல்ல முன்னேற்றம் அடைந்தது. இதன் காரணமாக ஐ.சி.சி.யின் முழு உறுப்பினராகி டெஸ்ட் போட்டியில் விளையாடும் அந்தஸ்தை பெற்றுள்ளது.குறிப்பாக அந்த அணியின் இளம் வீரரான சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் கடின முயற்சியால் மிகப்பெரிய வளர்ச்சியடைந்துள்ளார். இந்தியாவில் நடைபெற்ற இந்த வருடத்திற்கான ஐ.பி.எல். தொடரில் இடம்பிடித்தார். முதன்முறையாக ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஏலத்தில் விடப்பட்டனர். இதில் சுமார் 3 கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்து ஐதராபாத் அணி ரஷித் கானை ஏலம் எடுத்திருந்தது.ஐதராபாத் அணிக்காக களம் இறங்கிய ரஷித் கான் தனது மாயாஜால பந்து வீச்சால் கலக்கினார். இதனால் முன்னணி வீரராக திகழ்ந்தார். அதன்பின் கரீபியன் பிரிமீயர் லீக் தொடர் பங்கேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *