பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மக்கள் மனநல அமைப்பு கண்டனம்

Comments (0) செய்திகள், தமிழ்நாடு, மருத்துவம்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

தனியார் தொலைக்காட்சியில் 100 நாட்களுக்கு நடத்தப்பட்டு ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழச்சியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் ஒளிபரப்பப்பட்டதறக்கு வாவ் மனநல மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு மக்கள் மனநல அமைப்பு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக வெளியடப்புட்டுள்ள அறிக்கையில்கூ

 • DSC00006
 • DSC00010
 • DSC00024
 • DSC00037
றி இருப்பதாவது-தங்கள் தொலைக்காட்சியில் பிக் பாஸ் (Bigg Boss) என்ற நிகழ்ச்சியில் 37 மற்றும் 38 நாட்களில் ஆகஸ்ட் 1 மற்றும் 2 தேதிகளில் மனநலம் என்ற தலைப்பில் ஒளிபரப்பப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மனநலம் தொடர்பாக தவறான தகவல்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. குறிப்பாக மனநோய் ஏற்படுவதற்கான காரணங்கள், மனநோய் உள்ளவர்களின் நடத்தை, சிகிழ்ச்சை விவரங்கள் அனைத்தும் மனநல மருத்துவத்திற்கு புறம்பாக ஒளிபரப்பப்பட்டது.மனநலம் குறித்து நமது சமூகத்தில் இன்னும் களங்கம் (Stigma) உள்ளது என்பதை நாம் நினைவில் வைத்துஇருக்கவேண்டும். இந்நிகழ்ச்சியின் மூலம் இது அதிகமாக வாய்ப்பு உள்ளது. மனநோய் உள்ளவர்கள்2016 ஆம் ஆண்டு ஊனமுன்றோர் உரிமைச் சட்டத்தில் ஒரு பிரிவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.இச்சட்டத்தில் பிரிவு 92 இன் படி ஊனமுன்றோர்களை கேலி மற்றும் கேவலமாக சித்தரிப்பது சட்டத்தின்படி தவறாகும். இப்பிரிவை மீறுபவர்களுக்கு ஐந்தாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.ஆதலால் மனநோயினால் பாதிக்கப் பட்டவர்களிடமும் அந்த குடும்பம் சாந்தமக்களிடமும் விஜய் டிவி மற்றும் என்னோடமோல் என்ற நிறுவனமும் பிக் பாஸ் நிகழ்ச்சின் நடுவில் இரெண்டு நாட்களுக்காவது “மன்னிப்பு” கேட்பதுடன் மேலும் இதுபோல் தவறான கருத்துக்களை நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டுகிறோம்.இது விஜய் டிவிகு மட்டும் இல்லாமல் சினிமா, நாடகம், அனைத்து தொலைக் காட்சிகள் மற்றும் ஊடக நண்பர்களுக்கும் இது பொருந்தும். மனநலம் பற்றிய விழிப்புணர்வும், அதனை குறித்த செய்திகளை நம் சமூகத்தில் கவனமாக எடுத்து செல்வதுடன் மனநலம் குறித்த விவரகங்களை மனநலம் வல்லுனர்குளுடன் கலந்து ஆலோசித்து நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *