பிக் பாஸ் நிகழ்ச்சியில் கதறி அழுத ஜல்லிக்கட்டு ஜூலி

Comments (0) கலை, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த உலக நாயகன் கமல்ஹாசனின் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி ஞாயிற்றுகிழமை தொடங்கியது.உலக நாயகன் கமல்ஹாசன் முதன் முதலாக தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி பிக் பாஸ்.2வது எபிசோடு: செவ்வாயன்று ஒளிபரப்பான எபிசோடில், குழுவில் இருந்து யாரை வெளியேற்றுவது என முதல் நாள் முடிவில் அனைவரும் கருத்து கூறினர். ஜூலி, நடிகர் ஸ்ரீ இதில் நெகடிவ் மார்க் வாங்கினர். 2ம் நாளில், பாத்திரம் கழுவ, வீடு சுத்தப்படுத்த, சமைக்க தனித்தனி குழு அமைக்கப்பட்டது. ஜூலி பாத்திரம் கழுவப் போய், கையை காயப்படுத்திக் கொண்டார். பிக் பாஸ் குழுவினர் ரம்ஜான் வாழ்த்து சொல்ல, பிரியாணி தரப்பட்டது. 2ம் நாள் இரவு, பிக் பாஸ் பட்டம் வெல்வேன் எனக் கூறிய ஜூலியை அனைவரும் கிண்டல் செய்ய, அவர் கதறி அழுதார்.முதல் எபிசோடு : முதல் எபிசோடு திங்கள் கிழமை ஒளிப்பரப்பட்டது. முதல் நாளில் ஆர்த்திக்கும் ஜல்லிக்கட்டு ஜூலியும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரவில் தூக்கம் வராமல் தவித்த நடிகை ஓவியா, வாழைப்பழமும், பிளாக் டீயும் வேண்டும் என்று கெஞ்சிக் கேட்டார்.மேலும் பிக்பாஸ் இல்லத்தின் தலைவராக பாடலாசிரியர் சினேகன் தேர்வு செய்யப்பட்டார். இறுதியாக தன்னை கட்டிப்பிடிக்கவே யாரும் இல்லை . என்ன விட்டு போயிராத என்று ஜல்லிக்கட்டு ஜுலி இளம் நடிகர் ஸ்ரீயிடம் ரகசியமாக பேசினார்.

 • kamal big boss
 • rat

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *