பிணவறை உதவியாளர் பணிக்கு பட்டதாரிகள்!

Comments (0) இந்தியா, கல்வி, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

நாடு முழுவதும் பரவிக்கிடக்கும் கல்வி நிறுவனங்களில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் பட்டம் பெற்று வெளியே வருகின்றனர். ஆனால் அவர்கள் அனைவருக்கும் வேலை கிடைப்பதில்லை. படித்த படிப்பிற்கான வேலை கிடைக்காவிட்டாலும், கிடைத்த வேலையை செய்ய பலர் படையெடுத்து செல்கிறார்கள். இந்நிலையில் பிணவறை உதவியாளர் பணிக்கு பி.எச்.டி, எம்.பில் பட்டதாரிகள் விண்ணப்பித்ததிலேயே தெரிகிறது இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் எவ்வளவு தலைவிரித்து ஆடுகிறது என்று.மேற்கு வங்காளத்தில் உள்ள மால்டா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஒன்றின் பிணவறைக்கு உதவியாளர் தேவை என விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. ஒரே ஒரு தற்காலிக பணியிடமாக இருந்த இந்த உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தான் தகுதி என குறிப்பிட்டிருந்தது. மருத்துவமனைக்கு கொண்டுவரப்படும் அனாதை பிணங்களை கணக்கெடுப்பது, அப்புறப்படுத்துவது, மருத்துவமனையில் உயிரிழப்போரின் உடல்களை சுத்தப்படுத்தி பிணவறையில் சேர்ப்பது, அடையாளம் காண முடியாத பிணங்களில் அடையாள நாடா இணைப்பது போன்ற வேலைகளை அவர்கள் செய்யவேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடந்த ஜூலை 7 ஆம் தேதி கடைசி நாளாக இருந்தது. மொத்தம் 315 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் அதில் ஆராய்ச்சி படிப்பு என்னும் பி.எச்.டி, எம்.பில் மற்றும் முதுகலைப்பட்டதாரிகளும் உள்ளனர் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.எட்டாம் வகுப்பு மட்டும் தகுதி என்று கூறியிருந்தும் பி.எச்.டி, எம்.பில் மற்றும் முதுகலைப்பட்டதாரிகள் இந்த பிணவறை ஊழியர் பணிக்காக விண்ணப்பித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அலுவலக துப்புரவு பணியாளர்கள் வேலைக்கு பி.எச்.டி முடித்தவர்கள் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.1980 ஆம் ஆண்டு வெளிவந்த k.பாலச்சந்தர் இயக்கிய வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் கமலஹாசன் முதுகலை படிப்பு படித்திருந்தும் வேலையின்மை காரணமாக டெல்லி சென்று முடிதிருத்தும் தொழில் செய்வார். “சொல்லடி சிவசக்தி எனை சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்” என்ற பாரதியாரின் பாடலோடு அப்போது இருந்த அதே நிலைமை 37 வருடங்கள் கழித்தும் இன்னும் சற்று கூட மாறவில்லை என்று தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *