பிரச்னைக்கு காரணம் பாஜகதான்;-மம்தா பானர்ஜி

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

டார்ஜிலிங்கில் நிலவிவரும் பிரச்னைக்கு பாஜகதான் காரணம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் மற்றும் அதன் சுற்றப்புற பகுதிகளைப் பிரித்து கூர்க்காலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் அமைக்கக்கோரி கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினர் கடந்த மாதம் 12-ஆம் தேதி முதல் காலவரையற்ற முழுகதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.இந்நிலையில், கூர்க்காலாந்து இயக்க ஒத்துழைப்பு கமிட்டி சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று ஜூலை 11ஆம் தேதி நடைபெற்றது. அதில் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், வருகின்ற ஜூலை 15-ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. போராட்டத்தின்போது போலீஸ் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது.இதையடுத்து, கூர்க்காலாந்து தனிமாநில கோரிக்கைக்காக நடைபெற்று வரும் போராட்டத்தால், டார்ஜிலிங் மலைப் பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. டார்ஜிலிங்கில் இத்தகைய சூழ்நிலை ஏற்படுவதற்கு பாஜக-வே காரணம் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று ஜூலை 12ஆம் தேதி தனது டுவிட்டரில் குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *