பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க பயணம்

Comments (0) அரசியல், இந்தியா, உலகம், செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சிறப்பு அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்கிறார்.வெள்ளை மாளிகையில் நேற்று பேசிய செய்தி தொடர்பாளர் ஹெதர் நாரட், இந்த மாத இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டன் வருவதற்கு ஒப்புக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். அதிபர் டிரம்பின் சிறப்பு அழைப்பை ஏற்று மோடி அமெரிக்கா வர உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பிரதமர் மோடியின் அமெரிக்க பயண விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஹெதர் குறிப்பிட்டுள்ளார்.narendra-modi-pti_650x400_61483196731பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது, வளைகுடா நாடுகள் கத்தாருடனான உறவை துண்டித்தது உள்ளிட்ட சர்வதேச பிரச்சனைகள் குறித்து விவாதிக்கவே டிரம்ப் பிரதமர் மோடியை அமெரிக்கா அழைத்திருப்பதாக கூறப்படுகிறது. அப்போது வெள்ளை மாளிகையில் மோடிக்கு டிரம்ப் சிறப்பு விருந்து அளித்து கவுரவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *