பிரதமர் நரேந்திர மோடி எதை விரும்புகிறாரோ அதை தான் மக்களும் சாப்பிட வேண்டுமா?

Comments (0) தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

MK stalinசென்னை: பிரதமர் நரேந்திர மோடி எதை விரும்புகிறாரோ அதை தான் மக்களும் சாப்பிட வேண்டுமா? என மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.எருது, பசு, காளை, கன்றுக் குட்டி, ஒட்டகம் ஆகியவற்றை இறைச்சிக்காக கொல்லக் கூடாது என்று சட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே மாட்டுக் கறி உணவுத் திருவிழா நடத்தப்பட்டது. புதுச்சேரியில் இந்த சட்டத்தை நிறைவேற்ற முடியாது என முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.இந்த உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்து மு.க.ஸ்டாலின் (திமுக), திருநாவுக்கரசர் (காங்கிரஸ்), ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்), முத்தரசன் (இ.கம்யூ), தொல் திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்), கே.எம். காதர்மொகிதீன் (இந்தியன் முஸ்லீம் லீக்), எம்.எச். ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி) ஆகியோர் வெளியிட்டனர். அதில் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.சென்னை ஆட்சியர் அலுவலகம் முன் இன்று திமுக தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு மு.க.ஸ்டாலின் கூறுகையில்,’ மாட்டிறைச்சியை தடை செய்ய மத்திய அரசுக்கு எந்தவித அதிகாரம் கிடையாது.வறட்சி நிவாரணம், பயிர்க் கடன் தள்ளுபடி பாதிக்கப்பட்டு விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் அவர்களை மேலும் துன்புறுத்தும் விதமாக மாட்டிறைச்சி தடையை மத்திய அரசு விதித்துள்ளது.’ என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *