பிரேக் பிடிக்காத காரணத்தால் 2 ரயில் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டது,

Comments (0) Uncategorized

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

imagesதிருச்சி: திருச்சி ரயில் சந்திப்பிற்கு 11 கி.மீ தொலைவில் பிரேக் பிடிக்காத காரணத்தால் 2 ரயில் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டது, ரயில்வே அதிகாரிகளிடையே பதட்டத்தை ஏற்படுத்தியது.
ஓட்டுநர் இல்லாமல் இயங்கிய திருச்சி சந்திப்பில் இருந்து பாலக்கரை மற்றும் கோட்டை ரயில் நிலையத்தை 2 சாலை பாலம் மற்றும் ஆற்றுப்பாலம் வழியாக கடந்து 15 நிமிடம் பயணித்து முத்தரசநல்லூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.திருச்சி-கரூர் மார்க்கமாக எந்த ரயில்களும் முத்தரசநல்லூரை கடந்து செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருச்சி ரயில் மண்டலத்தில், ரயில் பெட்டி எண் (40441 மற்றும் 16881) இரண்டையும் ஏ1 நடைமேடைக்கு கொண்டு வந்து திருச்சி-ஈரோடு பயணிகள் ரயிலுடன் இணைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, பிரேக் பிடிக்காத காரணத்தால் பெட்டி எண் (16881) தானாக நகர்ந்து மற்றொரு வண்டியையும் தள்ளிக்கொண்டு நகர்ந்தது. இதனை கட்டுப்படுத்த முயன்றும் முடியாத காரணத்தால், ரயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ரயில் பெட்டிகள் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.அதன்படி, ரயில் தண்டவாளங்களில் கற்களை வைத்து ரயில் பெட்டிகளை தடுத்து நிறுத்த ரயில்வே ஊழியர்கள் முயற்சித்துள்ளனர். பின்னர், கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு ஒருவழியாக ஒரு வழியாக முத்தரசநல்லூர் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகள் நிறுத்தப்பட்டது.இதையடுத்து, முத்தரசநல்லூர் ரயில் நிலையத்திற்கு வந்த மண்டல ரயில்வே மேலாளர் உதயகுமார் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *