பி.எஸ்.என்.எல் . ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் மாறன் சகோதரர்கள் ஆஜர்

Comments (0) இந்தியா, தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

562376-maran-brothersபி.எஸ்.என்.எல். இணைப்பை சட்ட விரோதமாக பன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரான கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேருக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.முந்தைய மத்திய காங்கிரஸ் ஆட்சியின்போது, மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தார். அப்போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அதிவேக உயர் இணைப்புகள் கொண்ட தொலைபேசி இணைப்புகளை சன் டிவிக்கு பயன்படுத்தி, பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 1 கோடியே 78 லட்சம் ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்தாண்டு டெல்லி சிபிஐ போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இவ்வழக்கில், குற்றப்பத்திரிகை நகலைப் பெற கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் இன்று சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.அதன்படி இன்று ஆஜரான கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்பட 7 பேருக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கபட்டது. இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு விசாரணைக்காக மாறன் சகோதரர்கள் ஆஜரானதை செலபோனில் படம் எடுத்த செய்தியாளர்களுக்கு வழக்கறிஞர்கள் மிரட்டல் விடுத்ததால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *