பீகார்: நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க ஆதரவுடன் நிதிஷ்குமார் அரசு வெற்றி

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி ஆட்சியமைத்த நிதிஷ்குமார் நேற்று முன் தினம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். லல்லு கட்சியுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட அவர் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து நேற்று காலை மீண்டும் முதல்-மந்திரியாக பதவி எற்றார்.இதனையடுத்து, நிதிஷ்குமார் 2 நாளில் சட்டசபையை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் கேசரிநாத் திரிபாதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இன்று சட்டசபையையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.
பீகார் சட்டசபையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 243 ஆகும். எனவே நிதிஷ்குமார் மெஜாரிட்டியை நிரூபிக்க 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. ஐக்கிய ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்கள் 71 பேரும், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 53 பேரும் சேர்ந்தால் நிதிஷ்குமாருக்கு 124 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நிலை இருந்தது.எதிர் அணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் பலம் 80 ஆகவும், காங்கிரஸ் பலம் 27 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, சட்டசபைக்கு வெளியே நிதிஷ் குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஷ்ட்ரிய ஜனதா தள எம்.எல்.ஏக்கள் போராட்டம் நடத்தினர்.இந்நிலையில், கடும் அமளிகளுக்கு இடையே நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், நிதிஷ் குமாருக்கு ஆட்சிக்கு ஆதரவாக 131 எம்.எல்.ஏக்களும்., எதிராக 108 எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர். இதனால், பீகார் மாநிலத்தில் முதல் மந்திரியாக நிதிஷ்குமார் தொடர்ந்து நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *