புஜாரா படைத்த சாதனை!

Comments (0) செய்திகள், விளையாட்டு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் டெஸ்டில் 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
அதன்தொடர்ச்சியாக இன்று (ஆகஸ்டு 3) தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. கடந்த போட்டியில் காயம் காரணமாக அணியில் இடம்பெறாத ராகுல் இந்த போட்டியில் களமிறங்கி அரைசதம் அடித்தார். தொடக்க வீரர் தவான் அதிரடியாக விளையாடினாலும் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். ராகுல் 57 ரன்களிலும், கேப்டன் கோலி 13 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். நிலைத்து நின்று விளையாடிய புஜாரா மற்றும் ரஹானே சதம் அடித்து அசத்தினார்கள்.முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்களை சேர்த்துள்ளது. புஜாரா 128 ரன்களும், ரஹானே 103ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கின்றனர். புஜாரா விளையாடும் 50ஆவது டெஸ்ட் போட்டி இதுவாகும், இதுவரை 13 சதங்களைப் பூர்த்தி செய்துள்ள அவர், 50ஆவது போட்டியில் சதம் அடித்த 7ஆவது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 4000 ரன்களை சேர்த்த வீரர்கள் பட்டியலில் 3ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.அதேபோல் முதல் நாளில் 344 ரன்களை சேர்த்துள்ள இந்திய அணி, வெளியூர் மைதானங்களில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் முதல் நாளில் 300 ரன்களுக்கு மேல் அடித்த முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. முதல் போட்டியில் 399 ரன்களை சேர்த்த இந்திய அணி, இந்த போட்டியில் 344 ரன்களை சேர்த்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *