புதிய கார்களை அடுத்தடுத்து களமிறக்க மாருதி சுசுகி திட்டம்..!

Comments (0) வணிகம்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மாருதி சுசுகி-யின் விட்டாரா பிரஸ்ஸா கார் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் குஷியான அந்நிறுவனம் விரைவில் பல புதிய மாடல் எஸ்.யூ.வி (ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வெகிக்கிள்) கார்களை சந்தையில் களமிறக்க திட்டமிட்டுள்ளது. இப்புதிய எஸ்.யூ.வி கார், டாடா ஹெக்ஸா மற்றும் மஹிந்திரா எக்ஸ்.யூ.வி கார்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது. விட்டாரா பிரஸ்ஸா காரின் அளவிற்கு சிறியதான கார்களுக்கு சந்தையில் உள்ள நிலவரம் என்ன? என்பதை மாருதி சுசுகி ஆராய்ந்து வருகிறது.இதுகுறித்து நிர்வாக அதிகாரி கென்னிசி ஆயூகாவா கூறுகையில், ‘’எஸ்.யூ.வி கார்களுக்கு இந்தியாவில் இருக்கும் வாய்ப்புகளை மாருதி சரியாக பயன்படுத்திக்கொள்ளும். சந்தை நிலவரப்படி இந்திய வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் எஸ்.யூ.வி கார்களைத்தான் விரும்புகிறார்கள். அதற்குதான் இங்கே பெரிய சந்தையும் உள்ளது. கடந்த மார்ச் 21, 2017 வரையிலான நிதி ஆண்டை பார்த்தால், இந்தியாவில் பல நிறுவனங்கள் தயாரித்த எஸ்.யூ.வி மாடல் கார்கள் 30 சதவீத அளவில் விற்பனை ஆகியுள்ளன’என்றார்.மாbakers-chocolate car jpgருதி-சுசுகி நிறுவனத்திற்கு மிகப்பெரிய விற்பனை அளவுகோளை கொடுத்தது விட்டாரா பிரஸ்ஸாதான். மார்ச் வரை இந்தியாவில் சுமார் 1,95,741 விட்டாரா பிரஸ்ஸா கார் விற்பனையாகியுள்ளது. இதன்மூலம், கடந்த நிதியாண்டில் மாருதியின் எஸ்.யூ.வி கார் விற்பனை இந்தியாவில் 38 சதவீதம் அதிகரித்துள்ளது. 5வது தலைமுறைக்கான எஸ்.யூ.வி மாடலை வைத்து புதிய மாருதி எஸ்.யூ.வி கார் உருவாக உள்ளது. இதன் உற்பத்தி 2020ல் துவங்கும் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *