புழக்கத்திற்கு வந்தன புதிய 200 ரூபாய் நோட்டுகள்

Comments (0) இந்தியா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

புதிய 200 ரூபாய் நோட்டுகள் டெல்லியில் புழக்கத்துக்கு வந்தன இன்று புதிய வடிவிலான 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படும் என்றும் ரிசர்வ் வங்கி முன்கூட்டியே அறிவித்திருந்தது. அதன்படி இன்று முதல் புதிய 50 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துள்ளன. டெல்லியில், நீண்ட வரிசையில் காத்திருந்தவர்கள் புதிய நோட்டுக்களைப் பெற்றுச் சென்றனர். அவற்றை கைகளில் பிடித்தபடி ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். விடுமுறை தினம் என்பதால் சென்னையில் ரிசர்வ் வங்கி திங்களன்றே திறக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதனால், தமிழகத்தில் புதிய 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்துக்கு வர சற்று தாமதமாக வாய்ப்புள்ளது. இந்திய வரலாற்றிலேயே 200 ரூபாய் மதிப்பில் பணம் வெளியிடப்பட்டுள்ளது இதுவே முதன் முறையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *