பெங்களூருவில் கன்னட அமைப்பினர் போராட்டம் :

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பெங்களூருவில் ‘நம்ம மெட்ரோ’ திட்டத்தில் கன்னடகர்களுக்கு முன்னுரிமை அளிக்கக் கோரி கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கர்நாடக மாநிலம் பெங்களூருவில், ’நம்ம மெட்ரோ’ திட்டத்தில் பணியாற்றும் ஹிந்தி பொறியாளர்களை வெளியேற்றக் கோரி கன்னட அமைப்பினர் ’மெஜஸ்டிக் கெம்பெகவுடா’ மெட்ரோ ரயில் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்ட த்தில் ஈடுபட்டவர்கள், கன்னடர்களுக்கு முன்னுரிமை வேண்டும் என முழக்கங்களை எழுப்பிய படியும், பதாகைகளில் ஹிந்தி வேண்டாம் என குறிப்பிட்ட பலகைகளை ஏந்தியும் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து, பலகைகளில் இருந்த ஹிந்தி மொழியை கருப்பு வண்ணங்கள் தீட்டி அழித்ததோடு, தீயிட்டு கொளுத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. போராட்டக்காரர்களுடன் போலீசாரும், மெட்ரோ அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *