பெட்ரோல், டீசல் விலை குறைப்பு – எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு

Comments (0) செய்திகள், தமிழ்நாடு, வணிகம்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 12 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 24 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன.சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரொல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அந்த வகையில் கடந்த 1-ஆம் தேதி பெட்ரோல் விலை சுமார் 2 ரூபாய் 50 காசுகள் வரையிலும் டீசல் விலை சுமார் 1 ரூபாய் 20 காசுகள் வரையிலும் உயர்த்தப்பட்டன.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 69 ரூபாய் 93 காசுகளுக்கு விற்கப்பட்டு வரும் நிலையில் தற்போது 1 ரூபாய் 12 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று டீசல் விலை 59 ரூபாய் 22 காசுகளுக்கு விற்கப்படும் நிலையில் தற்போது லிட்டருக்கு 1 ரூபாய் 24 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.
how-to-articles0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *