பெண் கடத்தல் முயற்சி வழக்கில் பாஜக தலைவர் தலையீடு!

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சண்டிகரில் ஐஏஎஸ் அதிகாரியின் மகளை பாஜக தலைவரின் மகன் கடத்த முயன்ற விவகாரம் தொடர்பாக, ‘பாஜக தலைவர் சுபாஷ் பராலா என்னை தொலைபேசியில் அழைத்தார் ஆனால், அவர் என்ன கூறுவார் என்று எனக்கு முன்பே தெரியுமென்பதால் அவருடைய அழைப்பை நான் ஏற்கவில்லை’ என்று ஐஏஎஸ் அதிகாரி வீரேந்தர் தெரிவித்துள்ளார்.ஹரியானா மாநிலம் சண்டிகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மாநில பாஜக தலைவர் சுபாஷ் பராலாவின் மகன் விகாஸ், அவருடைய நண்பர் ஆஷிஷ் குமார் ஆகியோர் ஐஏஎஸ் அதிகாரி வீரேந்தரின் மகளை காரில் துரத்திச் சென்று கடத்த முயன்றுள்ளனர். இதையடுத்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், துரத்திச் சென்ற இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களைச் சில மணி நேரத்திலேயே ஜாமீனில் விடுதலை செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பாஜக தலைவர்கள் ஆற்றிய எதிர்வினை கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.இது குறித்து எந்தக் கருத்தையும் கூறாமல் இருந்துவந்த விகாஷின் தந்தை சுபாஷ் பராலா, ‘பாதிக்கப்பட்ட அந்தப் பெண் என் மகள் போன்றவர். இந்த விவகாரத்தில் நான் எந்த நிர்ப்பந்தத்திலும் ஈடுபடவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறக் கூடாது, சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்’என்று தெரிவித்துள்ளார்.பாஜக தலைவரின் மகன் எஸ்யுவி காரில் அந்தப் பெண்ணைத் துரத்திச் செல்லும் காட்சி சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளதால், விசாரணைக்காக ஆஜராக போலீசார் விகாஸுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.இந்தச் சூழ்நிலையில், சுபாஷ் பராலா தனக்கு தொடர்ந்து செல்போனில் அழைப்பு விடுப்பதாக ஐஏஎஸ் அதிகாரி வீரேந்தர் தெரிவித்துள்ளார். “என்னுடைய செல்போனில் பாஜக தலைவர் பராலாவின் அலைபேசி எண் இல்லை. ஆனால் ட்ரூகாலர் வசதியின் மூலம் அழைப்பது அவர்தான் என்று தெரிந்தது. எனவே நான் அந்த அழைப்பை எடுக்கவில்லை. ஏனென்றால் அவர் என்ன கூறுவார் என்று எனக்குத் தெரியும்” என்றார் வீரேந்தர்.“இதனால் என்னுடைய பணியில் ஏற்படக்கூடிய எதிர்வினைகளையும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன். இந்தச் சம்பவத்தை பாஜகவினர் அதிகாரத்தில் இருக்கும் வரை மறக்க மாட்டார்கள். என்னுடைய மகள்களிடம் வெளியில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கும்படி சொல்லியிருக்கிறேன். ஏனென்றால் யாராவது ஒருவர் அவர்களுடைய பர்சில் போதைப் பொருளை வைத்துவிட்டு அவர்களை வழக்கில் சிக்கவைக்க முயற்சிக்கலாம்” என்றும் அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கூறியுள்ளார்.

 • 800x480_223c497e9cb74649bed9e9e1d8509ef0
 • Vikas Barala 2
அதிகாரத்தில் உள்ளவர்கள் மற்றும் பணக்காரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்ணைத் துரத்திச் செல்வது, தொல்லை தருவது, கடத்த முயல்வது போன்ற அத்துமீறல்களைச் செய்வது குறித்துப் பல செய்திகள் வந்துள்ளன. இதுபோன்ற வழக்குகள் பெரும்பாலும் விரைவில் மூடப்படும். காரணம், சம்பந்தப்பட்டவர்களின் பண பலம், அதிகார பலம். ஆனால், இந்த முறை பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதால் துணிச்சலுடன் வழக்கை அவர் சந்திக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *