பெரியகுளம் அருகே ஓபிஎஸ்சை கண்டித்து மறியல்

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பெரியகுளம்: தேனி மாவட்டம், லட்சுமிபுரம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமாகவும், உறவினர்கள் பெயரிலும் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் உள்ளது. இதன் பாசனத்திற்காக 200 அடி ஆழத்தில் கிணறுகள் தோண்டப்படுகின்றன. இதனால் குடிநீருக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு ஓபிஎஸ்சே காரணம் எனக்கூறி லட்சுமிபுரம் கிராம மக்கள் நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, ஓபிஎஸ் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் நேற்று காலை பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் வீட்டிற்கு குழுவினர் சென்றனர். வீட்டில் அவர் இல்லாததால் செல்போனில் தொடர்பு கொண்டனர். அவர் போனை எடுக்காததால், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார், உறவினர் சரவணன் ஆகியோரது செல்போன்களுக்கு தொடர்பு கொண்டனர். அவர்களும் போனை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் கிணறு அமைக்கும் பணியை நிறுத்தினர். மறியலை கைவிட்ட பொதுமக்கள், `கிணற்றை லட்சுமிபுரம் கிராமத்திற்கு ஒப்படைக்க வரும் 26ம் தேதி வரை அவகாசம் அளிப்பது; ஒப்படைக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்’ என தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *