பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் தெரசா மே

Comments (0) அரசியல், உலகம், செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

650 இடங்களைக் கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் பதிவாக வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.மொத்தம் உள்ள 650 இடங்களில் பெரும்பான்மை பெற 326 இடங்கள் தேவை. பிரதமர் தெரசா மேயின் கன்சர்வேட்டிவ் கட்சி 318 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக 261 இடங்களை பெற்று ஜெர்மி கார்பியின் லேபர் கட்சி இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த இரண்டு கட்சிகளுக்கு அடுத்தபடியாக ஸ்காட்டிஸ் நேசனல் கட்சி 35 இடங்களை வென்றுள்ளது.இதனால் பிரிட்டனில் தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளது. தேர்தல் முடிவுகளை ஏற்று தெரசா மே உடனடியாக பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு தொழிலாளர் கட்சியின் ஜெர்மி கார்பி வலியுறுத்தியுள்ளார்.ஆனால் தெரசா மே பதவி விலக வாய்ப்பில்லை என்றும் அவர் எவ்வாறேனும் ஆட்சி அமைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரிட்டன் நாளிதழ்கள் தெரிவித்துள்ளன. தேர்தலில் 10 இடங்களைக் கைப்பற்றியுள்ள ஐக்கிய ஜனநாயகக் கட்சியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது.
_87786568_87786564அதே நேரத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் ஆட்சி அமைக்க மகாராணியிடம் தெரசா மே உரிமை கோரவுள்ளதாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது. பிரதமராக நீடிப்பது என்று தெரசா மே முடிவெடுத்துள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதனிடையே தொழிலாளர் கட்சியும் பிற கட்சிகளின் உதவியுடன் சிறுபான்மை அரசை அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *