பொதுப்பாதையை நடிகர் சங்கம் ஆக்கிரமித்ததாக தொடரப்பட்ட வழக்கு

Comments (0) கலை, சினிமா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டும் இடத்தில் பொதுப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து பதிலளிக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.செnadigar-sangam-building-resized1ன்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள இடத்தில் கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டிய தென்னிந்திய நடிகர் சங்கம் அஸ்திவாரம் அமைத்தது. இந்நிலையில், அப் பகுதியைச் சேர்ந்த சீரங்கன், அண்ணாமலை ஆகியோர், இந்தக் கட்டிடம் பொது சாலையை ஆக்கிரமித்து கட்டப்படுவதாகவும், அதை மீட்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வி.பார்த்திபன் அமர்வு முன் வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டிடம் கட்டப்படும் இடத்தில் சாலை இல்லை என்று சென்னை மாநகராட்சி தெரிவித்திருப்பதாக நடிகர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அஞ்சலகத்துக்கு செல்லும் சாலை அங்கு இருந்ததாகவும், இதற்கான ஆவணங்கள் சென்னை மாநகராட்சியில் உள்ளது எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.இதையடுத்து, இதுகுறித்து பதிலளிக்குமாறு, மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டசென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *