‘போங்கு

Comments (0) சினிமா, விமர்சனம்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

‘பாகுபலி’ ஆர்ட் டைரக்டர் சாபு சிரிலிடம் உதவியாளராக வேலை பார்த்த தாஜ் இயக்கியுள்ள படம் 16pongu’.நட்ராஜ், ரூஹிசிங், அர்ஜுன் ஆகிய மூவரும் சொகுசுக்காரான ரோல்ஸ்ராய்ஸ் விற்கும் ஷோரூமில் வேலை செய்கின்றனர். ஒரு அரசியல்வாதிக்கு காரை டெலிவரி செய்யும் பொறுப்பை நட்ராஜ் அண்ட் கோவிடம் நிர்வாகம் ஒப்படைக்கிறது. அப்போது சில மர்ம நபர்களால் அந்த கார் கடத்திச் செல்லப்படுகிறது.ஆனால்-இதற்காக நட்ராஜும், அவரது நண்பரும் திருட்டுப்பட்டம் கட்டப்பட்டு ஜெயிலுக்கு செல்கிறார்கள். அவர்கள் வேறெங்கும் வேலை செய்யாதபடி ப்ளாக்லிஸ்ட்டும் செய்யப்படுகிறார்கள்.முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல கார் திருட்டு தொழிலில் ஈடுபட்டு வயிற்றைக் கழுவி வருகிறார்கள் நட்ராஜ், ரூஹிசிங், அர்ஜுன் குழுவினர். மதுரையைச் சேர்ந்த பெரிய ரவுடியான ஷரத் லோகித்தஷ்வாவிடம் இருக்கும் பத்து விலை உயர்ந்த கார்களைத் திருட வேண்டிய அசைன்மென்ட் கிடைக்கிறது. அங்கு தங்களது வேலை பறிபோக காரணமாக இருந்த அந்த ரோல்ஸ்ராய்ஸ் காரும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்கள். அதன்பின் தன்னை திருடனாக்கிய ஷரத் லோகித்தஷ்வாவை பழி வாங்கினரா? அவர் ஏன் காரை கடத்தினார்? ரோல்ஸ் ராய்ஸ் காரை மீட்டெடுக்கும் போராட்டத்தில் நட்ராஜ் ஜெயித்தாரா, இல்லையா என்பதுதான் ‘போங்கு’ படத்தின் கதை.
சதுரங்க வேட்டை’க்குப் பிறகு நடிப்பில் வேட்டையாடுமளவுக்கு ‘ரேர் பீஸ் நட்டி’க்கு ஸ்ட்ராங் கதை கிடைத்திருக்கிறது. வழக்கம் போல் படபட பேச்சும், விறுவிறு நடையும், தெறிக்கும் வசனங்களும் நட்டியின் நடிப்பாற்றலுக்கு மகுடம் சூட்டுகின்றன. காதலர்களாக காட்டாவிட்டாலும் நட்டி – ரூஹிசிங் கெமிஸ்ட்ரி கிளுகிளுக்க வைக்கிறது.மனிஷாஸ்ரீக்கு பெரிய ஸ்பேஸ் இல்லையென்றாலும் அழகால் கவனிக்க வைக்கிறார். மிரட்டல் வில்லனாக வரும் சரத் லோகித்தஷ்வா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கொடுத்த வாய்ப்பில் தன் உடல்மொழியால் பின்னி பெடல் எடுத்திருக்கிறார் அதுல்குல்கர்னி. சாம்ஸ், அர்ஜுன், முனீஸ்காந்த், ‘பாவா’ லட்சுமணன் என அனைவரின் நடிப்பும் ஓ.கே.ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி கதையின் வேகத்துக்கு ஈடுகொடுத்து விறுவிறுப்பாக படமாக்கியிருக்கும் விதம் பிரமாதம். ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் ஓகே ரகம்தான். பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். வழக்கமான கதைதான். ஆனால் வித்தியாசமான திரைக்கதை மூலம் விறுவிறுப்பான படத்தைக் கொடுக்கும் முயற்சியில் ஜெயித்திருக்கிறார் இயக்குநர் தாஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *