போலீசார் மற்றும் கூர்க்காலாந்து போராட்டக்காரர்கள் மோதல்

Comments (0) அரசியல், உலகம், செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

டார்ஜிலிங்கில் போலீசார் மற்றும் கூர்க்காலாந்து போராட்டக்காரர்களிடையே இன்று நடந்த மோதலில் போலீசார் உள்பட 2 பேர் பலியாகினர். 8 போலீசார் காயமடைந்துள்ளனர்.டார்ஜிலிங்கில் கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சியின் ஊடக ஆலோசகர் பிக்ரம் ராய் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.அக்கட்சியின் எம்.எல்.ஏ.வான அமல் ராயின் மகனான அவரது கைதினை தொடர்ந்து அங்கு பதற்றம் நிறைந்த சூழ்நிலை காணப்படுகிறது. அவருக்கு ஆதரவாக அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், அக்கட்சியினர் போலீசாருக்கு எதிராக சிங்மரி பகுதியில் இன்று நடத்திய போராட்டத்தில் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. போலீசாரின் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. அவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் அக்கட்சியின் ஆதரவாளர் ஒருவர் பலியானார். இத்தகவலை சட்டம் மற்றும் ஒழுங்கு ஏ.டி.ஜி. செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.இத_4617f08c-51bd-11e7-8a38-d46223a68388ேபோன்று, இந்திய ரிசர்வ் பட்டாலியனை சேர்ந்த கிரண் தமங் என்பவரும் கொல்லப்பட்டுள்ளார். எனினும், இத்தகவலை முதல் மந்திரி மம்தா பானர்ஜி மறுத்துள்ளார். தமங் கடும் காயமடைந்து உள்ளார். அவரது நிலைமை ஆபத்து நிறைந்த கட்டத்தில் உள்ளது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *