மகாத்மா காந்தி ஒரு சாமர்த்தியமான வர்த்தகர் – அமித் ஷா

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு காங்கிரஸ் கட்சியை கலைக்க விரும்பிய மகாத்மா காந்தி, ஒரு சாதுர்யமான வர்த்தகர் என்று பா.ஜ.க. தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அமித் ஷா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசினார். அப்போது, மகாத்மா காந்தி ஒரு சாதுர்யமான வர்த்தகர் என்று குறிப்பிட்டார்.இதdownload (7)னால் தான் சுதந்திரப் போராட்டத்துக்காக ஏற்படுத்தப்பட்ட காங்கிரஸ் கட்சியை, சுதந்திரத்துக்குப் பின் கலைக்க விரும்பினார் என்று அமித் ஷா சுட்டிக்காட்டினார். காந்தி எண்ணியதுபோல காங்கிரஸ் கட்சி கலைக்கப்படவில்லை என்றபோதும், தற்போது உள்ளவர்கள் அந்த எண்ணத்தை நிறைவேற்றும் செயலை மேற்கொண்டிருப்பதாகவும் அமித் ஷா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *