மகிளா காங்கிரஸ் மோதல் அடிதடி

Comments (0) இந்தியா, தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

aditadi-225x146 சென்னை சத்தியமூர்த்தி பவனில் மகிளா காங்கிரஸ் பிரமுகர்கள் இடையே நடைபெற்ற அடிதடி மற்றும் மோதலால் பெரும் பரபரப்பு நிலவியது. .காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி அண்மையில் தமிழகம் வந்தபோது திருவள்ளூர் மாவட்ட மகிளா காங்கிரஸ் செயலாளர் கவுரி கோபால் சார்பில் வைக்கப்பட்ட வரவேற்பு பேனரில் அகில இந்திய செயலாளர் ஹசீனா சையத்தின் படம் இடம் பெறவில்லை. இதனால் கவுரி கோபாலை திருவள்ளூர் மாவட்ட மகிளா காங்கிரஸ் செயலாளர் பொறுப்பில் இருந்து ஹசீனா சையத் நீக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஹசீனா சையத், தன்னை பகைத்துக் கொண்டால் என்ன நிகழும் என தற்போது கவுரி கோபாலுக்கு புரிந்திருக்கும் என்று கூறியுள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த கவுரி கோபால், மகிளா காங்கிரசின் அகில இந்திய செயலாளர் ஹசீனாவிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட் டுள்ளார். இந்த வாக்குவாதம் மோதலாக வெடித்த்து. அப்போது தமிழக மகிளா காங்கிரஸ் செயலாளர் ஜான்சிராணியும், பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட கவுரி கோபாலும் இணைந்து ஹசீனாவை தாக்கி யதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த ஹசீனாவின் கணவர் உமர், தனது மனைவியை தாக்கிய ஜான்சிராணி மற்றும் கவுரி கோபாலிடம் விளக்கம் கேட்டுள்ளார். அவரையும் ஜான்சி ராணி மற்றும் கவுரி கோபால் இணைந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதையடுத்து ஜான்சிராணி மற்றும் கவுரி கோபாலிடம் இருந்து கணவர் உமரை மீட்டு ஹசீனா சையத் அங்கிருந்து தப்பி ஓடினார். அப்படியும் விடாமல் ஹசீனா வின் கணவர் உமரை ஜான்சிராணியும், கவுரி கோபாலும் விரட்டி விரட்டி தாக்கியுள்ளனர். இந்த மோதலை அடுத்து சத்திய மூர்த்தி பவனில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மோதல் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், மோதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *