மதசார்பற்ற கொள்கையில் உறுதியாக இருப்பவர் கருணாநிதி: சீதாராம் யெச்சூரி

dbzwadavyaeiz4oமதசார்பற்ற கொள்கையில் உறுதியாக இருப்பவர் கருணாநிதி என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.கருணாநிதியின் வைர விழாவில் கலந்து கொண்டு சிதாராம் யெச்சூரி கூறும்போது,” சென்னையில் பிறந்தேன், ஹைதராபத்தில் படித்தேன், டெல்லியில் வசிக்கிறேன் .
எனது அடையாளம் இந்தியன். செம்மோழி மாநாட்டிற்கு கருணாநிதி என்னை அழைத்தார். கருணாநிதி தனியார் மயமத்தலுக்கு ஏதிராக எங்களுடன் போராடியவர். மதசார்பின்மை கொள்கையில் உறுதியாக இருந்தார்தனது எழுத்து வசனத்தால் தமிழ் திரையுலகின் போக்கை மாற்றியவர். கருணாநிதி மிகச்சிறந்த நகைச்சுவை உணர்வு உடையவர்.கடந்த 75 ஆண்டு காலமாக தொடர்ந்து முரசொலியில் தலையங்கம் எழுதி வருவது சாதையே.இந்திய அரசியல் அமைப்பின் நான்கு தூண்களுக்கும் முக்கியத்துவம் அளித்தவர் .தனது மகனுக்கு ஸ்டாலின் என பெயர் வைத்து மூலம் கம்யூனிஸ்ட் கொள்கையில் ஈடுபாடு உள்ளவர் என்பதை அறிய முடியும். அரசியல்தலைவர்களுக்கு கருணாநிதியின் வழிகாட்டுதல் தேவை.கருணாநிதியின் அரசியல் பணி பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும்தற்போது இருக்கும் அரசியலில் சூழலில் மு.க.ஸ்டாலிக்கு பெரும் பங்கு உள்ளது. பாஜக அரசில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளது, இளைஞர்கள், விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வில்லை. பல்வேறு நாடுகளில் பாசிச ஆட்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. நாட்டின் மாற்றத்துக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்திருக்கிறோம்” என்று அவர் கூறினார்.

Comments are closed.