மதுரையில் எம்.ஜி.ஆர். கட்-அவுட் அருகில் நின்று செல்பி எடுத்த;-தமிழக முதல்அமைச்சர்

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

மதுரையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி புகைப்பட கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்து பார்வையிட்டார்.தமிழக முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா இன்று முதல் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் வரை தமிழக அரசு சார்பில் அரசு விழாவாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. 32 மாவட்டங்களிலும் விழா கொண்டாடப்பட உள்ளது.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்க விழா மதுரையில் இன்று நடக்கிறது. இதற்காக ரிங் ரோடு அம்மா திடலில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவுக்கு தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் தலைமை தாங்குகிறார். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் முன்னிலை வகிக்கின்றனர். தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்று பேசுகிறார். விழாவில்

 • 201706301245047479_Edappadi-Palaniswami-Participation-MGR-Century-opening_SECVPF
 • Daily_News_6581341028214
எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து 75 ஆயிரம் பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்க விழா கொண்டாட்டமாக மதுரையில் சில நாட்களாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார்.விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட முதல்-அமைச்சருக்கு பாண்டிகோவில் அம்மா திடலில் உள்ள விழா மேடை வரை கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். விழா திடலில் அரசின் செய்தித்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்து பார்வையிட்டார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையட்டி புகைப்பட கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். பின்னர் அவர் எம்.ஜி.ஆர். கட்-அவுட் அருகில் நின்று செல்பி எடுத்துக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *