மதுரையில் எய்ம்ஸ் அமையாவிட்டால் ராஜினாமா – ஆர்.பி.உதயக்குமார்

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாவிட்டால் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் மற்றும் எம்.எல்.ஏ. போஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.மதுரை மாவட்டம் T.கல்லுப்பட்டியில் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையில் ஆர்.பி. உதயக்குமார் மற்றும் மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி. உதயக்குமாரிடம், எய்ம்ஸ் மருத்துவமனையை தஞ்சாவூரில் அமைக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசை அணுகி இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஆர்.பி. உதயக்குமார், தேவையான இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் மதுரை மக்களுக்காக பதவியை ராஜினாமா செய்யவும் தயார் என்று கூறினார்.
02-1483334333-09-1386576075-udayakumar32-600தை தொடர்ந்து பேசிய எம்.எல்.ஏ. ஏ.கே. போஸ்., மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாவிட்டால் தாம் ராஜினாமா செய்து விடப் போவதாகவும், மதுரை மாவட்டத்தில் உள்ள இதர அதிமுக எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *