மதுரை சரவணா செல்வரத்தினம் கடைக்குச் சீல்!-உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

Comments (0) செய்திகள், தமிழ்நாடு, வணிகம்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

மதுரை பழங்காநத்தத்தில் உள்ள சரவணா செல்வரத்தினம் வணிக வளாகக் கட்டடம் விதியை மீறி கட்டப்பட்டுள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கில் ஏழு நாள்களுக்குள் சரிசெய்யப்படாவிட்டால் சீல் வைக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘மதுரை பழங்காநத்தத்தில் கட்டப்பட்டுள்ள சரவணா செல்வரத்தினம் வணிக வளாகக் கட்டடம் விதிமுறையை மீறி கட்டப்பட்டுள்ளது. மேலும், சில வாரத்துக்கு முன்பு வணிக வளாகத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி காற்றில் பறந்து சாலையில் விழுந்து விபத்தை ஏற்படுத்தியது. பார்க்கிங், தீயணைப்பு மற்றும் பாதுகாப்புகள் அற்ற மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு விதிகளைப் பின்பற்றாமல் கட்டப்பட்டுள்ள சரவணா செல்வரத்தினம் வணிக வளாகத்தைச் சீல் வைக்க மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (ஆகஸ்ட் 24) விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் முன்பு ஆஜரான மதுரை உள்ளூர் திட்டக்குழுமத்தின் உறுப்பினர் செயலர் அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், ‘அந்த கட்டடம் விதிமுறையை மீறி கட்டப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டது’ எனக் கூறப்பட்டிருந்தது.மேலும், சரவணா செல்வரத்தினம் வணிக வளாகத்தில் கட்டட வரைபட அனுமதியின்படி வாகன நிறுத்தம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை ஏழு நாள்களுக்குள் மாற்றி அமைக்க நிர்வாகத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, ஏழு நாள்களுக்குள் சரிசெய்யப்படாவிட்டால் சீல் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வணிக வளாகம் கட்டட விதிமீறல் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இந்த மனு மீதான விசாரணையை வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *