மத்தியப் பிரதேச அரசை பதவி நீக்கம் செய்க: விவசாயிகள் சங்கம்

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பாஜகவின் சிவராஜ்சிங் சௌஹான் தலைமையிலான மத்திய பிரதேச மாநில அரசை பதவி நீக்கும்படி விவசாயிகளின் தேசிய மகாசங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது201706110135516834_Farmers-Mahasangh-demand-dismissal-of-Shivraj-Singh-Chouhan_SECVPF
தங்களது போராட்டத்தை நாடு முழுவதும் தீவிரப்படுத்தபோவதாக அறிவித்துள்ள தேசிய விவசாயிகள் மகாசங்கம், சிவராஜ்சிங் சௌஹான் அரசை பதவி நீக்கம் செய்யும்படி கோரியுள்ளது. சுமார் 62 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான இச்சங்கம் பல தேசிய நெடுஞ்சாலைகளில் மறியல் போராட்டத்தை ஜூன் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் பகல் 12 மணியிலிருந்து 3 மணி வரை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. விவசாய உற்பத்தி பொருட்களுக்கு உள்ளீட்டு செலவில் 50 சதவீதத்தை இலாபமாக கொடுப்பதாக பாஜக 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும்படி கோரியுள்ளது. இது தவிர விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யும்படியும் கேட்டுக்கொண்டார். வறட்சியாலும், மோசமான விளைச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளதால் கடன் ரத்து தேவையென்று சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தீபக் ஷர்மா கூறினார்.
காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா மாநில பாஜக அரசின் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை கண்டித்து ஜூன் 14 முதல் மூன்று நாட்களுக்கு அறப்போர் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். வலது கம்யூனிஸ்ட் கட்சியும் நாடு தழுவிய விவசாய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளும், சங்கமும் மாநில முதல்வர் சௌஹானின் உண்ணாவிரத போராட்டத்தையும் விமர்சித்துள்ளனர். விவசாயிகளை சுட்டுத்தள்ளிவிட்டு உண்ணாவிரதம் இருப்பதால் அமைதி திரும்பி விடாது என்று சிபிஐ அறிக்கை குறிப்பிட்டுள்ளது. பிரதமர் மோடி விவசாயிகளிடம் பேச வேண்டும் என்றும் அக்கட்சி கோரியது. முன்னாள் ஆர் எஸ் எஸ் தலைவரும் விவசாயிகளின் தலைவருமான ஷிவ் குமார் ஷர்மா விவசாயிகளின் போராட்டத்தை பல வட-தென் இந்திய மாநில விவசாயப் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் விரிவுபடுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *