மத்திய அமைச்சரவையில் அதிமுக பங்கேற்காது!-டிடிவி தினகரன்

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக, எழும்பூர் நீதிமன்றத்தில் அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று ஆகஸ்ட் 1ஆம் தேதி ஆஜரான நிலையில், வழக்கு விசாரணையை வருகின்ற 3ஆம் தேதி நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.1996ஆம் ஆண்டு வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றது தொடர்பாக டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு, கடந்த 20 ஆண்டுகளாக எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டிடிவி தினகரன் தரப்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு வாதங்களைக் கேட்காமல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவதாகக் குற்றம்சாட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுப் பதிவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. அதைத்தொடர்ந்து, இந்த வழக்கு கடந்த மாதம் 24ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, டிடிவி தரப்பு வழக்கறிஞர் குற்றச்சாட்டுகளை எழும்பூர் நீதிமன்றத்தில் பதிவு செய்யும்போது அமலாக்கத்துறையின் வாதம் மட்டுமே கேட்கப்படுவதாக கூறினார். தங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் பொய்யான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவதாகவும் அவர் கூறினார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், குற்றச்சாட்டுப் பதிவின்போது எந்த மறுப்பையும் தினகரன் தரப்பு கூறவில்லை என்றார். மேலும், உயர்நீதிமன்றத்தில் தற்போது பொய்யான தகவல்களை தினகரன் தரப்பில் கூறுவதாக அமலாக்கத்துறை வழக்கறிஞர் கூறினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ். ரமேஷ், கடந்த 20 ஆண்டுகளாகியும் ஏன் இன்னும் இந்த வழக்கு முடிக்கப்படாமல், தொடர்ந்து நிலுவையிலேயே உள்ளது என்று கேள்வி எழுப்பினர். இது தொடர்பான ஏப்ரல் 19ஆம் தேதி வரை பதிவான குற்றச்சாட்டுகளை ரத்து விட்டு, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் முன்னிலையில் புதிய குற்றச்சாட்டுகளை எழும்பூர் நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். அதையடுத்து, எழும்பூர் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் இன்று ஆகஸ்ட் 1ஆம் தேதி நேரில் ஆஜரானபோது, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி டிடிவி தினகரன் மீது இன்று மீண்டும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அப்போது, தன் மீதான குற்றச்சாட்டை டிடிவி தினகரன் மறுப்பு தெரிவித்து ஆட்சேபித்தார். அதையடுத்து, வருகிற ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை எழும்பூர் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.வழக்கு விசாரணை முடிந்ததும் எழும்பூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தினகரன், ’நீதியின்மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் குற்றமற்றவன்; நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். பொதுமக்களைச் சந்தித்துப் பேச உள்ளேன். கட்சியின் வளர்ச்சிள்ளேன். மேலும்,க்காக அயராது உழைப்பேன்’ என்றார்.நீதிமன்றத்துக்குச் செல்வதற்கு முன்னதாக

NEW DELHI, INDIA – APRIL 22: AIADMK leader T. T. V. Dinakaran arrives to appear before Delhi Police for questioning in connection with an alleged attempt to bribe an Election Commission official for retaining the ‘two leaves’ party symbol and the related money trail, at airport T3, on April 22, 2017 in New Delhi, India. (Photo by Ravi Choudhary/Hindustan Times via Getty Images)

, பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று ஆகஸ்ட் 1 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசுகையில்: நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்காகத் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்திட உள்ளேன். வருகின்ற 4ஆம் தேதி பெங்களூரு சென்று பொதுச்செயலாளர் சசிகலாவை சந்திக்க உ 4ஆம் தேதி முதல் தொண்டனாக மட்டுமல்ல, துணைப்பொதுச்செயலாளராகவும் பணியாற்ற வேண்டிய கடமை உள்ளது என்று குறிப்பிட்ட அவர், பொதுச்செயலாளர் செயல்பட முடியாத நிலையில் உள்ளதால் செயல்படுத்த வேண்டிய இடத்தில் தாம் உள்ளதாகக் கூறினார். அதேபோல், மத்திய அமைச்சரவையில் அதிமுக பங்கேற்கும் என்று வெளியான செய்திகள் தவறானது என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *