மர்ம உறுப்பை அறுத்ததில் புதைந்து கிடக்கும் மர்மங்கள்

Comments (0) இந்தியா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கேரளாவில் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த சாமியாரின் ஆண் உறுப்பை தான் அறுக்கவில்லை என்று சம்பந்தப்பட்ட பெண் கூறியுள்ளார்.கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் சுவாமி கணேசானந்தா. அவர் கேரள சட்டக் கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றிருக்கிறார். அப்போது அவருடைய மர்ம உறுப்பை மாணவி அறுத்து தப்பிச் சென்றதாக செய்திகள் வெளியாயின.அத்துமீறிய சாமியாரின் ஆண் உறுப்பை அகற்றிய மாணவியின் துணிச்சலுக்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்திருந்தார். பல்வேறு மகளிர் நல அமைப்புகளும் அந்த மாணவிக்கு பாராட்டு கூறின.இதனிடையே, சாமியாராகிய எனக்கு ஆணுறுப்பு தேவையில்லை என்று தானே அதனை அறுத்துக்கொண்டதாக அந்த சாமியார் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.இப22105்படி இருக்க, “அந்த சாமியாரின் ஆண் உறுப்பை நான் துண்டிக்கவில்லை. போலீசார் அவ்வாறு வதந்தி பரப்பிவிட்டனர்” என்று அந்த பெண் விளக்கம் கூறியுள்ளார். அந்தப் பெண் திடீரென மாற்றிப்பேசுவதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *