மறக்க முடியாத பாடம் கற்பிப்போம் இந்தியாவுக்கு -சீனா எச்சரிக்கை

Comments (0) இந்தியா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சிக்கிம் எல்லையில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெறாவிட்டால் வரலாற்றில் மறக்க முடியாத பாடம் கற்பிப்போம் என இந்தியாவுக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.சிக்கிம் பகுதியில் இந்தியா, சீனா, நேபாள எல்லைகளின் மூச்சந்திப்பில் டோங்லாங் உள்ளது. அது தங்களுக்கு சொந்தம் எனக் கூறி அங்கு சாலை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. அதற்கு இந்தியாவும், பூடானும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அங்கு இந்தியா தனது ராணுவத்தை நிறுத்தியுள்ளது. இது சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி யுள்ளது. எனவே ராணு வத்தை வாபஸ் பெறும்படி வலியுறுத்தி வருகிறது. சிக்கிம் எல்லையில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெறாவிட்டால் வரலாற்றில் மறக்க முடியாத பாடம் கற்பிப்போம் என இந்தியாவுக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அதை இந்தியா கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் சீன வெளி யுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லூ சாங் பெய்ஜிங்கில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது டோங்லாங்கில் இந்திய ராணுவம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் போட்டோக்களை காட்டினர். அவர் கூறும் போது இது எப்போதும் இல்லாத நடை முறையாக உள்ளது. சட்ட விரோதமாக இங்கு முகாமிட்டிருக்கும் இந்திய ராணுவம் தனது படைகளை வாபஸ் பெறுவதே சிறந்தது. இக்கருத்தை இந்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். இப்பிரச்சினையில் இரு நாடுகளுக்கும் இடையேயான தூதரக உறவு தடைபடாது.
மறக்க முடியாத பாடம்மேலும் இங்கு சீன ராணுவத்தின் அன்றாட நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த இந்திய ராணுவம் முயற்சிக்கிறது. அது நல்ல தல்ல சீனா தனது பகுதியில் அதன் இறையாண்மையை பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது.எனவே, இந்தியா தனது ராணுவத்தை சிக்கிம் எல்லையில் இருந்து வாபஸ் பெற வேண்டும். இல்லாவிடில் 1962-ம் ஆண்டு நடந்த போரில் இந்தியா பெற்ற வரலாற்று சிறப்புமிக்க மறக்க முடியாத பாடத்தை கற்பிப்போம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *