மாட்டுக்கறி சாப்பிட்டதாக கூறி முஸ்லிம் இளைஞர் அடித்து கொலை …

Comments (0) இந்தியா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

புதுடெல்லி(23 ஜூன் 2017): டெல்லி அருகே ஓடும் ரெயிலில் கொடுமையாக தாக்கப்பட்டு முஸ்லிம் இளைஞர்கள் நால்வரை தூக்கி வீசியதில் ஒருவர் பரிதாபமாக பலியானார்.ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு டெல்லியிலிருந்து பொருட்கள் வாங்கி ஹரியானாவை நோக்கி இளைஞர்கள் நான்கு பேர் ரெயிலில் திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது ஒரே கோச்சில் ரெயிலில் பயணித்த மதவெறி பிடித்த சிலர் முஸ்லிம் இளைஞர்களை மதம் சார்ந்த பேச்சுக்கள் மூலம் சீண்டியுள்ளனர். மேலும் அவர்கள் மாட்டுக்கறி வைத்திருந்ததாகவும் சீண்டியவர்கள் கூறியுள்ளனர். ஆனால் அது எதுவும் அவர்களிடம் இருந்ததாக தகவல் இல்லை.இந்நிலையில் ரெயில் டெல்லியிலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள அசாவதி ரெயில்வே நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது அவர்கள் நான்கு முஸ்லிம் இளைஞர்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் நால்வரையும் ரெயிலிலிருந்து தூக்கி வீசியுள்ளனர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மீதமுள்ள மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தாக்குதலுக்கு உள்ளான நான்கு பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள், ஜுனைது, ஷாகிர், ஹாசிப் மற்றும் முஹ்சின் ஆகியோர். இதில் 16 வயது ஜுனைது பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை ஒருவரை கைது செய்துள்ளது. மேலும் விசாரனை நடைபெற்று வருகிறது. ரம்ஜான் பண்டிகை நெருங்கும் நிலையில் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *