மாணவ-மாணவிகளே கண்ணியமாக உடை அணியுங்கள்!-கல்வி இயக்குனரகம்

Comments (0) கல்வி, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கண்ணியமாக உடை அணியுங்கள் என மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.தமிழகத்தில் கலை கல்லூரிகள், பி.எட். கல்லூரிகள், உடற்பயிற்சி கல்லூரிகள் உட்பட மொத்தம் 1,480 கல்லூரிகள் உள்ளன. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிவடைந்து தற்போது வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாக கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவ-மாணவிகளுக்குக் கல்லூரி முதல்வர் அறிவுரை கூற வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குனரகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கல்லூரிகளில் ஏற்கனவே ஆடை கட்டுப்பாடு அமலில் உள்ளது. அதன்படி, புதிதாகச் சேர்ந்துள்ள மாணவ-மாணவிகளைக் கல்லூரிக்கு கண்ணியமான முறையில் உடை அணிந்து வரவேண்டும் என அக்கல்லூரி முதல்வர்கள் அறிவுறுத்த வேண்டும். மேலும், கல்லூரிக்கு சரியான நேரத்தில் வரவேண்டும். தேவை இல்லாமல் விடுமுறை எடுக்கக்கூடாது எனச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *