மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது!

Comments (0) செய்திகள், விளையாட்டு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழகத்தின் மாரியப்பனுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2016ம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழகத்தின் மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார். அவருக்குப் பிரதமர் மோடி உட்படப் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இவரது சேவையை பாராட்டிக் கடந்த 2017 ஜனவரி 25ம் தேதி இந்திய அரசு பத்மஸ்ரீ விருதினை அறிவித்தது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவரான மாரியப்பனுக்கு தமிழக அரசும் 2 கோடி பரிசை வழங்கியது.
இந்நிலையில் தற்போது அவருக்கு அர்ஜூனா விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜுனா விருது குழுவின் கூட்டம் இன்று (ஆகஸ்ட் 3 ) நடைபெற்றது. இதில், பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன், கிரிக்கெட் வீரர் புஜாரா, கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர், டென்னிஸ் வீரர் சாகித் மைனேனி உட்பட 17 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஹர்மன்பிரீத்திற்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 • 1501765323
 • 1501765323a
இதுபோல் விளையாட்டு துறையில் உயரிய விருதான கேல் ரத்னா விருதுக்கு ரியோ பாராலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியாவின் பெயரும் ஹாக்கி அணி முன்னாள் கேப்டன் சர்தார் சிங்கின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ள முதல் மாற்றுத்திறனாளி வீரர் என்ற சிறப்பையும் ஜஜாரியா பெற்றுள்ளார். இவர் கடந்த 2004ம் ஆண்டு ஏத்தென்ஸில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியிலும் தங்கள் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *