மார்க் ரட்டே பரிசாக அளித்த சைக்கிளில்;- பிரதமர் மோடி

Comments (0) அரசியல், இந்தியா, உலகம், செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரதமர் நரேந்திர மோடிக்கு நெதர்லாந்து பிரதமர் மார்க் ரட்டே சைக்கிள் பரிசளித்த சுவாரசியமான சம்பவமும் நடைபெற்றுள்ளது. பிரதமர் மோடி தனது 2 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு ஐரோப்பிய நாடான நெதர்லாந்துக்கு சென்றார். நேற்று அவர் அந்நாட்டின் பிரதமர் மார்க் ரட்டேயை ஆம்ஸ்டர்டாம் நகரில் சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே சமூக பாதுகாப்பு, நீர் மற்றும் கலாசார ஒத்துழைப்பு என 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயிற்று.இந்த சந்திப்பின்போது பருவநிலை மாற்ற ஒப்பந்தம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாடு ஆகியவற்றில் இருநாடுகளும் ஒத்துழைத்து செயல்படுவதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு பிரதமர் மோடிக்கு நெதர்லாந்து பிரதமர் மார்க் ரட்டே சைக்கிள் பரிசளித்த சுவாரசியமான சம்பவமும் நிகழ்ந்துள்ளது. ஓட்டுவது போன்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *