மாற்றுத்திறனாளிகள் நலன் : மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் விருது வழங்கி கவுரவித்தார்

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

மாற்றுத்திறனாளிகள் நலனிற்காக சிறப்பாக பணியாற்றிய 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி விருது வழங்கி கவுரவித்தார்.தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக சிறப்பாக பணியாற்றிய மைக்காக 2014ஆம் ஆண்டிற்கான மாநில விருதை அப்போதைய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலத்துக்கும், 2015ஆம் ஆண்டிற்கான மாநில விருதுகளை அப்போதைய கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் மற்றும் அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் ஆகியோருக்கும், 2016ஆம் ஆண்டிற்கான மாநில விருதை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மலர்விழிக்கும் முதலமைச்சர் பழனிசாமி வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் சரோஜா, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதன்மைச் செயலாளர் முகமது நசிமுத்தின் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் அலகு அலுவலர்கள் ஆகிய 51 அலுவலர்களுக்கு 44 லட்சம் ரூபாய் மதிப்பிலான 51 மடிக்க ணினிகளை வழங்கப்பட உள்ளது. இதற்கு அடையாளமாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் 7 பேருக்கு முதலமைச்சர் பழனிசாமி மடி கணினிகளை வழங்கினார். இதன்மூலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளை திறம்பட கண்காணிப்பதற்கும், அத்தியாவசியப் பொருட்களின் கொள்முதல், இருப்பு மற்றும் நகர்வை கண்காணிக்கவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *