மின்சார வசதி இல்லாத இந்திய பள்ளிகள்!

Comments (0) இந்தியா, கல்வி, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இந்தியாவில் உள்ள பள்ளிகளில் 37 சதவிகிதத்திற்கும் அதிகமானவற்றில் மின்சார வசதி இல்லை என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் உள்ள பள்ளிகளில் பெரும்பாலானவற்றில் மின்சார வசதி இல்லை என்று தேசிய கல்வி திட்ட பல்கலை மற்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான கேள்வியை காங்கிரஸின் சஞ்ஜெய் சிங் ராஜ்யசபாவில் எழுப்பினார். இதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் உபேந்திர குஷ்வாகா எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார். அதில், நாடு முழுவதும் 62.81 சதவீதம் பள்ளிகளில் மட்டுமே மின்சார வசதி உள்ளது. 2017 மார்ச் மாதம் வரையில் நாடு முழுவதிலும் 37 சதவிகித பள்ளிகளில் மின்சார வசதி இல்லை.அருணாசல பிரதேசம், அசாம், பீகார் , ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மேகாலயா, திரிபுரா போன்ற மாநிலங்களில் 40 சதவிகிதத்திற்கும் குறைவான பள்ளிகளிலேயே மின்சார வசதி உள்ளது. அதேவேளையில், சண்டிகார்க், டாடாரா மற்றும் நாகர் ஹவெலி, டாமன் மற்றும் டையூ, லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளிகளில் 100 சதவிகிதம் மின்சார வசதி உள்ளது என்று கூறியுள்ளார்.இது தொடர்பாக பத்திரிகை ஒன்றிடம் அவர் கூறியதாவது,” சர்வ சிக்ஷா அபியன்( எஸ்.எஸ்.ஏ) மற்றும் ராஷ்டிரிய மத்தியமிக் சர்வ சிக்ஷா அபியன்(ஆர்.எம்.எஸ்.ஏ) திட்டங்கள் மூலமாக ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் மின்சார வசதியை ஏற்படுத்த மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசுக்கு மத்திய அரசு உதவி செய்து வருகிறது. எஸ்.எஸ்.ஏ திட்டத்தின் கீழ் கடந்த 2016-17ம் ஆண்டில் 1,87,248 ஆரம்ப பள்ளிகளில் மின் வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. ஆர்.எம்.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ் 12,930 உயர்நிலைப் பள்ளிகளில் மின் வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *