மீண்டும் காலா படப்பிடிப்பில் ரஜினி

Comments (0) சினிமா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கபாலியைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் `காலா’ படத்தின் போஸ்டர் வெளிவந்தபோது எதிர்பார்ப்பும் விமர்சனங்களும் உண்டாகியது. அதனையடுத்து ‘காலா’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் முடிவடைந்துள்ள நிலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி மும்பையிலிருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் ரஜினி. ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையில் முழுஉடல் பரிசோதனை செய்து கொண்டு,சில நாட்கள் ஓய்விற்குப் பிறகு நேற்று(ஜூலை10) சென்னை திரும்பியுள்ளார்

  • 1499756575
  • download (1)
ரஜினி வருவதைக் கேள்விப்பட்டு விமான நிலையத்தில் காத்திருந்த பத்திரிகையாளர்களின் எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் வேகமாக தன் காரில் ஏறி வீடு சென்று விட்டார். இன்று ஒருநாள் வீட்டில் ஓய்வெடுக்கும் அவர், நாளை முதல் சென்னையில் அமைக்கப்பட்டிருக்கும் மும்பை தாராவி செட்டில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார். ஈஸ்வரி ராவ், ஹூமா குரேஷி, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *