மீனவர்கள் மீது மோதிய பானாமா நாட்டு கப்பல் நிறுவனம் மீது கொலை வழக்கு பதிவு

Comments (0) இந்தியா, உலகம், செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கொச்சி அருகே விசைப்படகில் கப்பல் மோதி 3 மீனவர்கள் உயிரிழந்த விபத்தில் கப்பல் நிறுவனம் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் வாணியகுடியைச் சேர்ந்த 12 மீனவர்கள் மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 2 மீனவர்கள் சேர்ந்து கேரள மாநிலம் கொச்சி துறைமுகம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பனாமா நாட்டு சரக்குக் கப்பல் விசைப்படகின் மீது மோதியது. இதில் வாணியகுடியைச் சேர்ந்த தம்பிதுரை அசாமைச் சேர்ந்த 2 மீனவர்கள் என 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.இதdownload (4)ையடுத்து பனாமா சரக்குக் கப்பல் நிறுவனம் மீது கேரள போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *