மீனவர்கள் 5 பேர் கைது

Comments (0) இந்தியா, கல்வி, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது. இது குறித்து மத்திய மற்றும் மாநில அரசிடம் எவ்வளவோ முறையிட்டும் அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீனவர்கள் சில தினங்களுக்கு முன்பு தான் மீண்டும் கடலுக்கு சென்றுள்ளனர்.இநfishermen_647_030717121232்நிலையில் இலங்கை கடற்படை 5 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது. எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக விசை படகுடன் 5 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். ஏற்கனவே 11 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *