முதல் முறையாக சமூக வளர்ச்சி அலுவலராக திருநங்கை நியமனம்

Comments (0) அரசியல், இந்தியா, கல்வி, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

நாட்டிலேயே முதல் முறையாக ஒரிசா மாநிலத்தில் தனியார் கல்வி நிறுவனத்தில் சமூக வளர்ச்சி அலுவலராக திருநங்கை ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.ஒரிசா மாநிலம் புவனேஷ்வரில் கலிங்கா சமூக அறிவியல் கல்வி நிறுவனமானது இயங்கி வருகின்றது. இந்நிறுவனத்தில் சமூக வளர்ச்சி அலுவலராக சாதனா கின்னார் என்ற திருநங்கை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தொழில் நிர்வாகம் மற்றும் சமூக சேவை படிப்பில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்துள்ளார்.இதற்கு முன்னதாக சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றிய முன்னார், இந்த வாய்ப்பு தனக்கு மிகுந்த தன்னம்பிக்கையையும், ஊக்கத்தையும் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்காக கல்வி நிறுவன தலைவர் அச்யுதாவுக்கு தான் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மற201706111949327217_KISS-appoints-a-transgender-as-social-development-officer_SECVPF்றவர்களிடம் இருக்கும் திருநங்கைகள் மீதான தவறான அபிப்ராயத்தை மாற்ற முயற்சி செய்வதாகவும், திருநங்கைகளுக்கு சமூகத்தில் சரியான அங்கீகாரம் அளிக்கும் போது அவர்களாலும் சிறப்பாக செயல்பட முடியும் எனவும் சாதனா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *